விசாரணைக்கு வரும்படி நடேசனுக்கு மீண்டும் அழைப்பு!

முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமரன் நடேசன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like