திடீரென விலை ஏறியது GAS!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 5KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 503 ரூபாவால் அதிகரிக்க நிறுவனம் தீர்மானம் எட்டியுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு 5 KG சிலிண்டரின் புதிய விலை 1,101 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2.5KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 520 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12.5KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,257 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5KG லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

You May also like