கேஸ் விலை உயருமா? தீர்மானம் இன்று!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படும் என லிட்ரோ மற்றும் லாஃப் சமையல்  நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை (11) முதல் புதிய விலைகளில் விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எரிவாயு நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய, 550 ரூபாவால் சிலிண்டர் ஒன்றின் விலைய அதிகரிக்க வாழ்க்கை செலவு தொடர்பான குழு அனுமதி வழங்கிய போதிலும், அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

இந்த நிலையில், பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நேற்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

You May also like