100 பிக்குகளுடன் இந்தியாவுக்கு பறக்கிறார் நாமல்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வருகின்ற 20ம் திகதிக்கு முன் இந்தியா செல்லவுள்ளார்.

அவருடன் 100 பெளத்த பிக்குகளும் இந்தியா செல்லவுள்ளார்கள் என கூறப்படுகிறது.

குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் வரும் 20ம் திகதி பிரதமர் மோடியினால் திறக்கப்படும்.

இந்நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான நிலையம் பெளத்த கலாசாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக இந்திய தரப்பு கூறுகிறது.

இந்நிலையில் அங்கிருந்து முதல் விமானம் பிக்குமார்களுடன் இலங்கைக்கு வரவுள்ளது.

You May also like