கொழும்பு – யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

கோவிட் அச்சுறுத்தலினால் இச்சேவைகள் அண்மைய நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகிறது.

You May also like