சட்டவிரோத கேஸ் கப்பல் அம்பாந்தோட்டையில் நங்கூரம்?

ஈரான் போன்ற பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளிலிருந்து கேஸ் கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயற்பாடாக அமைவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனுடன் உள்நாட்டு நிறுவனமொன்றும் தொடர்புபட்டிருப்பதாகவும் கோவிட் காலத்தில் வணிக வங்கிகளிடம் இருந்து கடன் ஆவணம் பெற முடியாமல் இறக்குமதியாளர்கள் பெரிதும் திண்டாடிய நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தினால் அந்த ஆவணம் பெற்று சட்டவிரோத இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தடையை எதிர்கொண்டுள்ள நாடுகளிலிருந்து கேஸ் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதானது, அத்தடையை விதித்தித்த நாடுகளின் கடும் கோபத்தை சம்பாதித்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைவதாக கூறப்படுகிறது.

You May also like