பஸ் டிக்கட் விலையும் உயருமா? அமைச்சர் தந்த பதில்

அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பஸ் டிக்கட் விலையும் அதிகரிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்று திங்கட்கிழமை மாலை கருத்து வெளியிட்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அவ்வாறானதொரு முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று கூறினார்.

பஸ் டிக்கட் விலைகளை அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. எனினும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

You May also like