நியூஸிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் திருமலையில் கைது

நியூஸிலாந்திற்கு கடல்மார்க்கமாக படகு மூலம் செல்லத் திட்டமிட்ட 63 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் திருகோணமலை – ஓர்ஸ்ஹில் என்ற பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை திருகோணமலை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைதாகியிருக்கின்றனர்.

கைதாகிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்உள்ளிட்ட பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறறது.

அரச புலனாய்வுப் பிரிவின் திருகோணமலை அலுவலகத்திற்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like