அமெரிக்க பிரமுகர் அவசரமாக இலங்கைக்கு விஜயம்;அரசுக்கு 12மணிவரை கெடு?

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் சார்ந்த மற்றுமொரு ஒப்பந்தத்தை செய்ய அமெரிக்காவின் போட்டிரஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இலங்கைக்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஒப்பந்தம் பற்றி மக்களுக்கு அரசாங்கம் தெளிவு படுத்தவில்லை. அதனிடையே மற்றுமொரு ஒப்பந்தம் செய்துகொள்ள தயாராகி வருகிறது என்று குறிப்பிட்ட இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர் ரஞ்சன் ஜயலால், இன்று நண்பகலுக்குமுன் அரசாங்கம் தெளிவு படுத்தாமல் இருந்தால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வதாகவும் எச்சரித்தார்.

You May also like