ஜனாதிபதி தோல்வியா? ஒத்துக்கொள்ள தயங்கும் அமைச்சர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் அரசாங்கம் பலவீமடைந்துவிட்டதாகவும், தோல்விகண்டுவிட்டதாகவும் எந்த இடத்திலும் கூறவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு பேசினார்.

எனினும் அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த நிகழ்வில் பேசியிருந்த ஜனாதிபதி, மக்களின் அபிலாஷைகளை அப்படியே முழுமையாக நிறைவேற்ற முடியாமற் போனதையிட்டு தமது அரசாங்கமும் அமைச்சரவையும் மீளாய்வு செய்வதாக குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You May also like