கொழும்பு விகாரையில் கைக்குண்டு-பரபரப்பில் பிக்குகள்

கொழும்பிலுள்ள பிரபல விகாரை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்திபெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையில் இந்த கைக்குண்டு இன்று பிற்பகலில் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

விகாரையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபரால் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டு பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு விரைந்த குண்டு செயலிழப்பு பிரிவின் உதவியுடன் பொலிஸார் கைக்குண்டை செயலிழக்கவும் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைக்குண்டு எப்படி விகாரைக்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன.

இதேவேளை, வருகின்ற 20ஆம் திகதி அதிகமான பௌத்த மக்கள் விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக செல்லவிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like