அரசியலுக்கு வருவீர்களா? நேரடியாக பதிலளித்தார் யொஹானி

மெனிகே என்ற பாடலில் ஊடாக உலகத்தையே தன்வசம் திருப்பிய இலங்கைப்பாடகி யொஹானி நாடு திரும்பியுள்ளார்.

சுமார் 02 வாரங்களுக்கும் மேலாக அவர் இந்தியாவிலும் டுபாயிலும் இசை நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் பங்கேற்றிருந்த நிலையில் தற்போது தாய்நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது, இந்தப் பிரபல சந்தர்ப்பத்தை வைத்து அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலளித்த யொஹானி, அப்படியொரு நடவடிக்கையை தாம் செய்யப்போவதில்லை என்று உறுதிபடக்கூறினார்.

You May also like