அத்துமீறும் இந்தியப் படகுகளை பிடியுங்கள்-டக்ளஸ் பணிப்பு

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு இழுத்துவருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மீனவர்களை அறிவுறுத்தியுள்ளதாக அறியமுடிந்தது. எல்லைதாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படும் வரையில் அரசியல் பிரமுகர்கள் எவர் வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்று பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைதாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படும் வரையில் அரசியல் பிரமுகர்கள் எவர் வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்று பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லைதாண்டி அத்துமீறிய மீன்பிடி நடவடிக் கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகளை கரைக்கு இழுத்துவருமாறும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளை தாம் பார்த்துக் கொள்வதாகவும் தொலைபேசி ஊடாக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அறிவுறுத்தியுள்ளதாக அறியமுடிந்தது.

You May also like