மீண்டும் இந்தியா செல்கிறார் ஜனாதிபதி-நாடு திரும்ப விமானமும் தயார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவர் வருகின்ற 20ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குஷிநகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

இதற்காக இலங்கையிலிருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட பிக்குமார்களும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இந்தியா சென்று இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதியும் இவர்களுடன் செல்லவுள்ளார்.

விமான நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்றவுடன் முதலாவது விமானப் பயணம் இலங்கைக்கே நடத்தவிருப்பதோடு அந்த விமானத்தில் ஜனாதிபதியும் பிக்குமார்களும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like