ஆசிரியர் – அதிபர் பணிபகிஷ்கரிப்பு தொடரும் என அறிவிப்பு

ஆசிரியர்கள் – அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்படாது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று சமரசப் பேச்சு இடம்பெற்றது.

இதில் 02 கட்டமாக, தீர்வைப் பெற்றுக்கொடுக்க பிரதமர் இணங்கிய போதிலும் அந்தத் தீர்வை ஆசிரியர் – அதிபர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நிராகரித்துள்ளனர்.

இன்று காலை இதுபற்றி பேச்சு இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சில் 30ற்கும் அதிகமான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

You May also like