கொழும்பு மாடி வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு பிறிஸ்டல் வீதியிலுள்ள 05 மாடிக் குடியிருப்பில் மேல் மாடியிலிருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் T 56 ரக 176 தோட்டாக்களும், ஏனைய தோட்டக்கள் என 09 ரவைகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த மாடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் வழங்கிய தகவலுக்கமைய இன்று பகல் இந்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இதேவேளை நேற்று கொழும்பு பொரலெஸ்கமுவ – பெல்லன்வில விகாரை வளாகத்திலிருந்து செயற்பாட்டிலுள்ள கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like