அதிரடி தகவலை வெளியிட தயாராகும் முக்கிய தொழிலதிபர்

தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூகவலைத்தளத்தில் அவர் நேற்று இட்ட பதிவிலிருந்தே அவரது ஆயத்தம் தெரிகிறதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

முகநூலில் அவர், “என்டிஜன் ஆடையை கழற்றவா” என்று குறிப்பிட்டிரு்நதார்.

நாட்டிற்குத் தேவையான கோவிட் தொற்று பரிசோதனை பொருட்கள் என்பன இறக்குமதியில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்த விமர்சனங்கள் காணப்படுகின்ற நிலையில்தான் அவர் இவ்வாறான பதிவொன்றையும் வெளியிட்டிருக்கின்றார்.

இதேவேளை ஜனாதிபதியின் செயலாளரான திரைசேறியின் முன்னாள் செயலாளர் P.B. ஜயசுந்தரவுக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே கடும் பனிப்போர் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like