தமிழ் அரசியல்வாதிகளின் பெயரும் Pandora ஆவணத்தில்?

உலக அளவில் புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் பன்டோரா ஆவணத்தில் இலங்கையிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் சிக்கியிருப்பதாக மற்றுமொரு பரபரப்பு தகவல் கசிந்திருக்கின்றது.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றில் இந்த தகவல் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் மற்றும் மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி உட்பட பிரபல தொழிலதிபர்கள் பலரும் இந்த ஆவணத்தில் வரி கட்டாமல் வெளிநாடுகளில் சொத்து சேர்த்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றி உள்நாட்டு வரிவருமானத் திணைக்களத்தின் கவனமும் திரும்பியிருப்பதாக புதிய தகவல் கூறுகின்றது.

You May also like