இலங்கையில் ஒன்லைன் விளையாட்டுகளுக்கு விரைவில் தடை?

ஒன்லைன் மூலம் கையடக்கத் தொலைபேசிகளில் விளையாடுவதால் சிறுவர்கள் மத்தியில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதனால் பெற்றோருடன் முரண்பட்ட பலர் இன்றுவரை தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர். எனவே இந்த ஒன்லைன் விளையாட்டுக்களை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்.

இப்படியான கோரிக்கையை கொழும்பில் இன்று நடந்த பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பில் பேசிய மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று முன்வைத்தார்.

இதேவேளை, நாட்டின் எதிர்கால தலைமுறையை ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து மீட்பதற்கு கவனம் செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

You May also like