போர்காலத்தை விட இன்று பலர் வெளியேற முயற்சி-பொலிஸ்

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சிகள் அண்மைய நாட்களாக அதிகரித்து வருவதாக மோர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை போர்க் காலத்தில் மாத்திரமே இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஒருமாதத்தில் மாத்திரம் அதிகளவான இளைஞர்கள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை செய்திருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கால்கடுக்க, நீண்டவரிசையில் ஒருநாள் சேவையில் விரைவாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளதினமும் ஆயிரம்பேர்வரை வருவதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

You May also like