சிறையிலிருந்து ரஞ்ஜன் அனுப்பிய கடிதம்-கொழும்பில் பரபரப்பு!

பன்டோரா ஆவண சர்ச்சை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு விசேட கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை அனுப்பியுள்ளார்.

மறைக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து பன்டோரா ஆவணத்தின் ஊடாக அம்பலமாகியவர்களின் பட்டியலில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட விடயங்களும், ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாக ரஞ்ஜன் ராமநாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You May also like