உள்நாட்டு பால்மா விலையும் கூடியது

உள்நாட்டு பால்மாவான ஐலேன்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 90 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மாவின் புதிய விலை 470 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 225 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,170 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது

You May also like