25 வயது இளைஞனின் கத்திக் குத்தில் பிரிட்டன் எம்.பி பலி

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் பொது இடத்தில் வைத்து கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

69 வயதுடைய பிரித்தானியாவில் கென்சவேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான  சேர் டேவிட் அமேஸ் இன்று வெள்ளிக்கிழமை பகல் எசெக்ஸ் தென்மேற்குப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய 25 வயதான சந்தேக நபர் கத்தியால் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயத்திற்கு உள்ளாகிய அவர் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like