சஜித் அணி எம்.பி இருவர் விரைவில் இராஜினாமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்யவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க மற்றும் நளின் பண்டார ஆகிய இருவருமே இவ்வாறு இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிற மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு இவர்கள் போட்டியிட உள்ளனர்.

மயந்த திசாநாயக்க மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும், நளின் பண்டார வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் களமிறங்கப் போவதாக Tamil.Truenews.lk இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

You May also like