இன்னும் இருவாரத்தில் புதிய அரசமைப்பு அமைச்சரவைக்கு!

இன்னும் இரண்டு வாரங்களில் உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபு, அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்று நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவிக்கின்றார்.

அமைச்சரவையில் பேச்சு நடத்துவதற்காக இந்த வரைபு சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகள் இதற்காக பெறப்பட்டிருந்தன.

இந்த வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கற் பணிகளை முடிவுறுத்தி அடுத்த வருட முதற்காலாண்டிற்கு முன்னதாக அதனை நிறைவுப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.

You May also like