அரசியலில் குதித்தார் மைத்திரியின் மகன்;விரைவில் தேர்தலிலும் போட்டி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன அரசியலில் உத்தியோகபூர்வமாக பிரவேசித்துள்ளார்.

அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த கூட்டம் ஒன்றையும் அவர் நேற்று மின்னேரிய பிரதேசத்தில் நடத்தினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவர் அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May also like