அநுரகுமாரவின் 5 கோடி ரூபா ஒப்பந்தம்-பரபரப்பை ஏற்படுத்திய பிரதிகள்

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் நற்பெயரை சமூகமயப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் எகில்வி என்கின்ற தனியார் விளம்பர நிறுவனத்துடன் ஜே.வி.பி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரதிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 50 மில்லியன் (05 கோடி ரூபா) செலவில் சமூக வலைத்தளங்கள், தனியார் தொலைக்காட்சிகள் என பல்வேறுமட்ட விளம்பரங்களையும், பிரபல்யப்படுத்துகின்ற செயற்பாடுகளையும் செய்வதற்காக குறித்த நிறுவனம் ஜே.வி.பியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக வெளியாகியுள்ள பிரதிகளில் காணமுடிகிறது.

எனினும் அப்படியாக வெளியாகியுள்ள செய்திகளை ஜே.வி.பி முற்றாக நிராகரித்துள்ளது.

இது அரசாங்கத்தின் இயலாத்தன்மை மற்றும் வங்குரோத்து நிலையை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி, இன்று திங்கட்கிழமை விசேட செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

ஜே.வி.பியை கலங்கப்படுத்துகின்ற இந்த செய்திக்குப் பின்னால் அரசாங்கமே இருப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You May also like