200 ரூபாவை அண்மித்த சீனி-கீரி சம்பா விலை!

சந்தையில் அரிசி விலை மற்றும் சீனி விலை என்பன மீண்டும் உயர்வடைந்துள்ளன.

வெள்ளை சீனி கிலோ விலை 122 ரூபாவை தாண்டிவிட்டது.

சில இடங்களில் 135 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு சீனியின் விலையும் 125 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையை கடந்து 138 ரூபா வரை விற்பனையாவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை கீரி சம்பா அரிசி விலை மீண்டும் 200 ரூபாவை கடந்திருப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகின்றன.

You May also like