அரசின் தீர்மானத்தை எதிர்த்து மதத்தலைவர்கள் இருவர் மனுத்தாக்கல்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மதத்தலைவர்கள் இருவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகிய இருவருமே இன்று திங்கட்கிழமை இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

குறித்த அமெரிக்க நிறுவனத்திற்கு எரிசக்தி வாயு விநியோகத்திற்கான உரித்தை அளிப்பதற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தங்களது மனுவில் கேட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை, அமைச்சரவையின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் என 54 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் நிவ் போட்ரஸ்  என்ற நிறுவனமும் உள்ளது.

You May also like