நள்ளிரவில் பிரபல பிக்கு ஒருவரை இரகசியமாக சந்தித்த ஜனாதிபதி!

அரசாங்கத்தை அண்மைய காலங்களாக கடுமையாக விமர்சித்து வருகிற எல்லே குணவன்ச தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென நேரில் சென்று சந்தித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது விகாரையின் இச்சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது.

சுமார் இரண்டரை மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தாக்கல் செய்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் மனுதாரராக எல்லே குணவன்ச தேரரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like