மருந்துவர் ஏலியந்தவின் மகன்,மகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொரோனா தொற்றினால் அண்மையில் உயிரிந்த மருத்துவர் ஏலியந்த வைட்டின் மகள் மற்றும் மகனுக்கான பாதுகாப்புக்காக 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி நிரோஷன் பாதுக்க இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் மகளிர் பிரிவிலிருந்து 04 உத்தியோகத்தர்கள் உட்பட 21 அதிகாரிகள் இவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்காக அவர்கள் மிரிஹானை பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

என்ன காரணத்திற்காக இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் அவர் கூறினார்.

You May also like