மாகாண சபையை நடத்த வேண்டாம்-அமைச்சர்கள் செய்த இரகசிய முயற்சி

◆◆◆EXCLUSIVE◆◆◆

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் மறுபக்கம் அதற்கெதிரான எதிர்ப்புகளும் அரசாங்கத்திற்குள் வலுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சார்பான அணியினர் மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி கோரிவருகின்ற நிலையில், மறுபுறத்திலுள்ள பஸில் எதிர்ப்பு குழுவினர் அதற்கு சாதகமற்ற கருத்தையே வெளியிட்டு வருகின்றனர்.

இதன் எதிரொலியாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிவரும் அனுராதபுரத்தில் உள்ள பிரபல பெண் சோதிடரான ஞானமேனி என்பவரை சந்தித்திருக்கின்ற சில அமைச்சர்கள், மாகாண சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதிக்கு அளிக்கும்படி கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நாட்டில் தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்குப் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பதே இந்த குழுவினரது கருத்தாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல, ஜனாதிபதி ராஜபக்ஷவின் உறவுமுறை சகோதரியான அமெரிக்காவிலிருக்கின்ற பிரீத்தி ராஜபக்ஷவுக்கும் சில அமைச்சர்கள் இதனை தெரியப்படுத்தியிருப்பதாக தகவல்.

You May also like