முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு100% உத்தரவாதம்;அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதத்தை அரசாங்கம் இன்று வழங்கியுள்ளது.

அனைத்து இலங்கையர்களிற்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் விசாரணைகளின் போது அரசாங்கம் எந்த சமூகத்தையும் விசேடமாக இலக்குவைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார்.
நாங்கள் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் அனைத்து சமூகத்தினரினதும் நலன்கள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கொழும்பில இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

You May also like