100 பிக்குகளுடன் இலங்கை விமானம் குஷிநகரில் தரையிறக்கம்

இன்று திறந்து வைக்கப்பட்ட இந்தியாவிலன் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர், குஷிநகர் விமான தளத்தில் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் 100 பெளத்த பிக்குகள் பயணித்தமை விசேட அம்சமாகும்.

கெளத்தம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த வரலாற்று சிறப்புமிக்க புனித நகராக குஷிநகர் விளங்குகின்றது.

பெளத்தர்களின் புனித நகரில் திறக்கப்பட்ட சர்வதேச விமான தளத்தில், இலங்கை விமானம் முதலாவதாக தரையிறங்கியமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமாக அவதானிக்கப்படுகின்றது.

You May also like