வெகுவிரைவில் 12 மணிநேர மின்வெட்டு?

நாட்டில் டிசம்பருக்குப் பின்னர் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரனவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும்.

அதேநேரம், 200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும்.

நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 வீத அளவு இழக்கப்படும்.

அப்படியானால், நாடு கண்டிப்பாக 12 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

You May also like