ஜனாதிபதியின் கொடும்பாவியை தாக்கிய விவசாயிகள்

அநுராதபுரம் – பதவிய பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொடும்பாவி மீது விவசாயிகள் சீற்றம் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் நபர் ஒருவர்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்று வேடம் அணிந்து வந்துள்ள சந்தர்ப்பத்தில் விவசாயிகள் குறித்த நபரை அடித்து விரட்டிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.

பசளை கேட்டும் இரசாயனப் பசளை மீதான தடையை நீக்கும்படி கோரியும் இன்றைய தினமும் பல இடங்களிலும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like