குஷிநகர் விமான நிலையம் திறக்கப்பட்டது(VIDEO)

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், இதில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்காவிலிருந்து 100 பௌத்த பிக்குகள் இன்று அதிகாலை இந்தியா நோக்கிப் பயணமாகியிருந்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஷவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இந்தியாவின்  29 ஆவது சர்வதேச விமான நிலையமாக  குஷிநகர்  விமான நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த தர்மத்தை மேலும் வலுப்படுத்தவும் இந்தியாவிலுள்ள பௌத்த தலங்களின் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் நோக்கிலும் இந்த சர்வதேச விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

You May also like