மனிதரை உண்ணும் மீன் இனம் கொழும்பு குளங்களில்?

மனிதர்களை கொன்று உண்ணும் பயங்கரமான மீன் இனம் கொழும்பிலுள்ள பிரதான குளங்களில் உள்ளன என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“பிரன்ஹா” என்று அறியப்படும் இவ்வகையான மீன் இனம் நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா, களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனஜீவரசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார இதனை கூறியுள்ளார்.

இந்த பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கு மீன் குஞ்சிகள் விடப்பட்ட போது ஏதோ ஒரு வகையில் மேற்படி மீன் இனமும் கலந்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like