ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற இலங்கை தாய்

இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

31 வயதான பெண் ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை காலை ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

இவ்வாறு பிறந்த குழந்தைகளில் 3 ஆண் , 3 பெண் குழந்தைகளை, குறித்த தாயார் பெற்று எடுத்துள்ளார்.

இச்சம்பவம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.

தற்போது, தாயும் 6 குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

தாயும், ஆறு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஒரு குழந்தை மட்டும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like