மொட்டு கட்சி தாக்குதலில் இரத்தத்தில் மூழ்கிய பெண் உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய அத்தனகல்ல பிரதேச சபை பெண் உறுப்பினர் காயமடைந்து இரத்தம் சொட்ட சொட்ட அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியது.

அத்தனகல்ல பிரதேச சபைக் கூட்டம் இன்று நடந்தது.

இதன்போது பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் சொற்போர் மூண்டது.

பொதுஜன முன்னணி உறுப்பினர் ஒருவரால் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த எதிர்கட்சிப் பெண் உறுப்பினரது காதில் இரத்தம் வழிந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த மோதலினால் ஒட்டுமொத்த பிரதேச சபையும் பதற்றத்தில் மூழ்கிய போதிலும் பொலிஸார் அங்கு வரவழைக்கப்படவில்லை.

You May also like