ஜும்மா தொழுகையை பள்ளி வாசல்களில் மேற்கொள்ள அனுமதி

முஸ்லிம்களின் ஜும்மா தொழுகையை பள்ளி வாசல்களில் மேற்கொள்வதற்கு இன்று முதல் சுகாதர அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜும்மா தொழுகை முன்னெடுக்க பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

மேலும், பள்ளிவாசலில் ஒன்று கூடுவதை முற்றாக தவித்து செயற்படுமாறும் குறித்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழுகையில் கலந்து கொள்ள சமூகமளிப்பவர்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.

You May also like