தமிழ் ஊடகர்,கரு,பேராயர்,ராஜித,ஷானியின் உயிருக்கு அச்சுறுத்தல்?

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரான தேசபந்து கரு ஜயசூரிய ஆகியோரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், தமது தகவல் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக “Tamil.Truenews.lk” இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதவிர, வெளிநாட்டிற்கு சென்றுள்ள வெகுசன ஊடகமொன்றின் ஆசிரியர் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஷானி அபேசேகர ஆகியோரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக “Tamil.Truenews.lk” இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இதற்கு முன்னர் கிலி மஹாராஜாவின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்ததை முன்கூட்டியே தெரிவித்திருந்தது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரான தேசபந்து கரு ஜயசூரிய உள்ளிட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதானது, ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி தரப்பிலிருந்தே ஏற்பட்டிருப்பதாகவும் “Tamil.Truenews.lk” மேலும் கூறுகின்றது.

You May also like