இளைஞர்கள் மீது கைவைத்த பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை

மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமைபுரிபவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏறாவூர்பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் மீது கடும் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு குறித்த அதிகாரி தற்சமயம் பணிநீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார்.

You May also like