நிரூபமாவை விசாரணைக்கு அழைத்தது ஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.

தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டுமுறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நிரூபமா ராஜபக்ஷவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருவதோடு விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

You May also like