சூடானில் கலவரம் – பிரதமர் கைது!

சூடான் பிரதமரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டு, பிரதமர் Abdallah Hamdok வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சூடான் பிரதமரின் ஊடக ஆலோசகரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அவருடன் சேர்த்து இன்னும் பல சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டடித்து அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

You May also like