பட்ஜட் முன் கட்சித்தாவ தயாராகும் இருவர் இவர்கள்தான்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆகிய இருவருமே இவ்வாறு பதவிவிலகியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருந்துவருகின்ற உட்கட்சி நெருக்கடி நிலைமை இந்த பதவிவிலகல் சம்பவத்திற்குப் பின்னால் வெளிச்சத்திற்குவந்துள்ளது.

இது தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு தெரிவுப்படுத்தி நேற்று கடிதமும் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடரின்போது குறித்த இரண்டு உறுப்பினர்களும் அரசுடன் இணையக்கூடிய சாத்தியம் இருப்பதாக கொழும்பு அரசியல் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like