நாடு திரும்பினார் அதானி 

இலங்கை்கு தனது குழுவினருடன் விஜயம் செய்திருந்த இந்திய கோடீஸ்வர வர்த்தகரான கௌதம் அதானி இன்று மாலை நாடு திரும்பினார்.

அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று மாலை 4.30 அளவில் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்குச் சென்றார் என்று எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கௌதம் அதானி கடந்த 24ஆம் திகதி 10 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை வந்ததோடு ஜனாதிபதியை இன்று சந்தித்தார்.

அதற்கு முன்னதாக நேற்றைய தினத்தில் அவரது குழு மன்னாருக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like