சீனத் தூதரிடம் அமைச்சர் சரண்டர்; இரசாயன பசளை கப்பல் மீண்டும் உள்ளே?

◆◆◆EXCLUSIVE◆◆◆

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே உள்ளிட்ட தரப்பினருக்கும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹோக்கிற்கும் இடையே நேற்று இரவு அவசர சந்திப்பொன்று நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் விவசாய மற்றும் பசளை சார்ந்த இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர், கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என அறியமுடிகிறது.

மேற்படி சந்திப்பில் சீனப் பசளைக்கு அரசாங்கம் அண்மையில் விதித்த தடை பற்றி பேசப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வுகூடத்தில் 03 தடவை தோல்வியடைந்த சீன இரசாயனப் பசளையை சுமந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகேதான் இன்னமும் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் இந்த பசளையை பாவனைக்காக நாட்டிற்குள் அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சாதாரணமாக இராஜதந்திர மட்டத்திலான பிரச்சினை எழுந்தால் சம்பந்தப்பட்ட நாட்டு தூதுவரை நேரில் அழைத்துதான் பேச்சு நடத்தப்படும்.

எனினும் இம்முறை இது தலைகீழாகவே நடந்துள்ளது.

You May also like