170 ரூபாவரை பாய்ந்தது சீனி விலை; மாபெரும் தட்டுப்பாடு!

பல பகுதிகளில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் தலைவிரித்தாடுகிறது.

நாட்டிற்குத் தேவைப்படும் வெள்ளை சீனி தற்போது களஞ்சியசாலைகளில் முற்றுப்பெற்றிருப்பதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தட்டுப்பாட்டை போக்குவது பற்றி நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலக்கியவண்ணவுக்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையே நாளை விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

சில இடங்களில் ஒரு கிலோ வெள்ளை சீனி 170 ரூபா வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.

You May also like