ஞானசார தேரர் தலைமையில் அதிரடி செயலணியை அமைத்தார் கோட்டா!

ஒரே நாடு ஒரே சட்டம் என்று விடயத்தின் நோக்கத்தை அடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளார்.

இதன் தலைவராக பொதுபலசேனா  அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை அவர் நியமித்துள்ளார்.

நாட்டிற்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை எப்படி அமுல்படுத்துவது மற்றும் அதற்கான வழிமுறை, சட்ட ஏற்பாடுகள் என்ன என்பதை அறிவதே இந்த செயலணியின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலணியில் மொத்தம் 13 பேர் உள்ளனர்.

You May also like